மின் சீரமைப்பு பணி தொடங்கப்படாததால் வேங்கடமங்கலம், மதுரைப்பாக்கம் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

புயலால் காட்டங்கொளத்தூர் ஒன்றியம், வேங்கடமங்கலம் ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும், மதுரைப்பாக் கம் கிராமத்தில் 40 கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால், அப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை களைக் கூட நிறைவேற்ற முடிய வில்லை.

மேலும், தெருக்களில் ஆங் காங்கே மின் கம்பங்கள் சாய்ந் துள்ளதால், இரு சக்கர வாகனங் கள் செல்ல வழி இல்லாமல் பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அருகில் பல கிராமங்களில் மின்சீரமைப்புப் பணிகள் முடிந்து, மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் இதுவரை சாய்ந்த கம்பங்களை அகற்றும் நட வடிக்கை கூட மேற்கொள்ளப்பட வில்லை. எனவே, இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, உடனடியாக மின் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாம்பாக்கம் மின்வாரிய பொறியாளர் கூறிய தாவது:

மாம்பாக்கம் மின்வாரிய எல் லைக்கு உட்பட்ட ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வேங்கட மங்கலம், மதுரைப்பாக் கம் போன்ற கிராமத்தில் ஓரிரு தினங்களில் மின் விநியோகம் செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 min ago

வாழ்வியல்

25 mins ago

தமிழகம்

41 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்