பொது சிவில் சட்டத்தை கண்டித்து மதுரையில் முஸ்லிம் ஜமா அத் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை கண்டித்து முஸ்லிம் ஜமா அத் சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி பேசும்போது, “இந்தியா பல மதங்களைக்கொண்ட நாடு மட்டுமில்ல; பல்வேறு மதங்கள் பிறந்த இடமாகவும் திகழ்கிறது. பொது சிவில் சட் டத்தை அமல்படுத்தினால் நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் பன் முகத்தன்மை பாதிக்கப்படும். நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், பொது சிவில் சட்டம் மட்டுமே முக்கியப் பிரச்சினையாக சொல்லப்படுகிறது” என்றார்.

அனைவருக்கும் பாதிப்பு

சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேசும்போது, “இந்தியாவில், தனிச் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் கிடையாது. 300-க்கும் மேற்பட்ட தனிச் சட்டங்களில் முஸ்லிம்களுக்கு 4 மட்டும்தான் உண்டு. பிற மதங்களுக்கும் தனிச் சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டத்தால் அனைத்து மதத்தினரும் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது, “மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறவில்லை. இந்தியாவை இந்துத்துவ நாடாக்க முயற்சி செய்யும் ஆர்எஸ்எஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

பொது சிவில் சட்டத்தை கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு நிறுத் தாவிட்டால், நாடு முழுவதும் மாபெரும் எழுச்சி ஏற்படும். சட்டத்தை நாடாளுமன்றத்தில் அமல்படுத்த விடமாட்டோம். இதை அமல்படுத்தினால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும்” என்றார்.

எஸ்டிபிஐ மாநிலச் செயலர் தெஹலான் பாகவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

விளையாட்டு

46 mins ago

க்ரைம்

50 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்