கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான இளைஞரை கைது செய்க: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் மலைமேடு கிராமம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சஞ்சீவியின் மகளான சூர்யா அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்திருக்கிறார். மாணவி சூர்யா கல்லூரிக்கு செல்லும் போது அதேபகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சூர்யா படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

அருண்குமாரின் தொல்லைகளும், சீண்டல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், அது குறித்து தமது பெற்றோரிடம் சூரியா புகார் செய்துள்ளார். அதன் பிறகும் தொல்லை தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் மகளின் பாதுகாப்பு கருதி, இதுபற்றி ஊர் பெரியவர்களிடம் சூர்யாவின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். இதையடுத்து ஊர்பஞ்சாயத்து கூடி, அருண்குமாரையும், அவரது பெற்றோரையும் விசாரித்து எச்சரித்து அனுப்பியுள்ளது. அதன்பிறகும் அருண்குமாரின் தொல்லை தொடர்ந்த நிலையில், சூர்யா கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்து கிடந்தார்.

தந்தையும், தாயும் கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சூர்யாவை அருண்குமார் கழுத்தை நெறித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அருண்குமார் தப்பி ஓடி பல நாட்களாகியும் இதுவரை அவரை காவல்துறை கைது செய்யவில்லை. சூர்யாவை படுகொலை செய்த இளைஞர் அருண்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கும்பல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

சூர்யாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருதலைக்காதல் செய்த இளைஞர்களின் தொல்லையால் உயிரை இழந்திருக்கின்றனர். ஆனால், இத்தகைய கொடுமையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

39 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்