பொறியியல் படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வு: 11,595 மாணவர்களுக்கு முதல்சுற்றில் இடங்கள் ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அதன்பின் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில் முதல்சுற்றில் பங்கேற்க தரவரிசையில் 1 முதல் 14,524 வரையுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 12,294 மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்