புதிய ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்த விஐடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

By செய்திப்பிரிவு

புதிய ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்த வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவருக்கு, ‘இளம் விஞ்ஞானி’ என்ற விருதை வழங்கி அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் கவுரவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் தொழில் நுட்பத்துறையில் இளம் விஞ்ஞானி களை உருவாக்கவும், அதற்கான ஆராய்ச்சித் திட்டங்களை ஒருங் கிணைந்து உருவாக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டில் ‘இன்னோ இண்டிகா அண்ட் இண்டிகோ பாலிசி’ என்ற அமைப்பை உருவாக் கினர்.

இதன் மூலம் ‘எப்பி 7’ என்ற இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்குவ தற்கான ஆராய்ச்சிப் போட்டிகளை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இளம் ஆராய்ச்சியாளர் களை, இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் வகையில் புதிய திட்டங்களுக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துருக்கி, நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் இணைந்து, நோய்த் தொற்று சம்பந்தமாக புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் விஐடி பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது.

நோய் தாக்குதலைத் தடுக்க தற்போது கார்போனியம், கொலிஸ் டின் மற்றும் டைகிசைக்ளின் ஆகிய ஆன்டிபயாடிக் பயன்படுத் தப்படுகின்றன.

இதற்கு மாற்றாக புதிய ஆன்டி பயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிப் போட்டியில், விஐடி பல்கலையில் உயிரி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர் பிரசாந்த் மனோகர் பங்கேற்றார்.

விஐடி பல்கலைக்கழக பேராசி ரியர் ரமேஷ் வழிகாட்டுதலுடன் கடந்த 2014-ம் ஆண்டு விஐடி ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆராய்ச் சிப் பணிகளை தொடங்கிய பிரசாந்த் மனோகர், ‘பேஜ் தெரப்பி’ என்ற தலைப்புடன் புதிய ஆன்டிபயாடிக் குக்கான புதிய பாக்டீரியாக்களை உருவாக்கி, அதைக்கொண்டு 3 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சி நடத்தி, ‘ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டெண்ட்’ என்ற புதிய கண்டுபிடிப்பை கண்ட றிந்து சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பாக பல ஆராய்ச்சி அறிக்கைகளை பெற்ற நிபுணர் குழுவினர் பிரசாந்த் மனோகர் கண்டுபிடிப்பை பரிசீலினை செய் தனர். இதே ஆராய்ச்சிப் போட்டி யில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா அவிலா, ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் சர்க்கார், கான்பூர் ஐஐடி மாணவர் விக்ரம் சோனி, அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் கல்யான்பாஸ்கர், பெங்களூரு ஐஐஎஸ்சியின் ஹரிகரன் முனிகான்டி ஆகியோரின் ஆராய்ச்சிப் படைப்புகள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.

இதன் இறுதிக் கட்டத் தேர்வுகள் கோவாவில் நடைபெற்றது. அதேபோல் சர்வதேச மாநாட்டில் வீடியோ பிரசன்டேஷன், சோசியல் மீடியா விருப்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விஐடி பல்கலைக்கழக மாணவர் பிரசாந்த் மனோகரின் புதிய கண்டுபிடிப்பான ‘பேஜ் தெரப்பி’ முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தது.

இதைத்தொடர்ந்து ‘எப்பி 7’ என்ற இளம் விஞ்ஞானிக்கான விருது பிரசாந்த் மனோகருக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

8 mins ago

க்ரைம்

12 mins ago

இந்தியா

10 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

56 mins ago

தமிழகம்

3 hours ago

மேலும்