75-வது சுதந்திர தினம்: சென்னையில் முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை

By செய்திப்பிரிவு

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளம் எதிரே முதல்நாள் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஆக.6) நடைபெற்றது.

75-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மூன்றுநாள் ஒத்திகை நிகழ்ச்சி: சுதந்திர தின விழாவில், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறைகளின் சார்பில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி இடம்பெறும். இதற்கான அணிவகுப்பு முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இரண்டாவது ஒத்திகை வரும் வரும் ஆக.9-ம் தேதியும், இறுதி ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி வரும் ஆக.13-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இன்று காலாட்படை, காமண்டோ படை, பெண்கள் படை உள்பட காவல்துறையின் 7 படைகளின் அணிவகுப்பு மற்றும் உதிரிப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகைகளும் நடைபெற்றன.

பொதுமக்கள் அனுமதி? - கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், குழந்தைகளைத் தவிரத்து பெரியவர்கள் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்: சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெறும். இந்த நாட்களில் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்