சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து நிர்வாகிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்: கைது செய்யக் கோரி போராட்டம்

By செய்திப்பிரிவு

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து நிர்வாகிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவஇளங்கோ மற்றும் மாநிலச் செயலாளர் ஜெய் கணேஷ் ஆகியோர் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று காலை யில் வந்தனர்.

அப்போது சிவ இளங்கோ, ‘‘நீதிமன்றத்தில் விசாரணை கூண்டுக்குள் உட்கார்ந்து பேசலாம் என்று சட்டத்தில் உள்ளது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்திலும் நான் உத்தரவு வாங்கி இருக்கிறேன். எனவே கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு விசாரணை நடத்த எனக்கு இருக்கை வழங்க வேண்டும்'’ என்று நீதிபதியிடம் கேட்டார்.

இதற்கு அங்கிருந்த வழக்கறிஞர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நின்றுகொண்டே விசாரணை முடிந்து வெளியே வந்த சிவ இளங்கோ, ஜெய்கணேஷ் ஆகியோரை வழக்கறிஞர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் களை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் விசாரணை

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீஸார் ‘‘புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று கூறியதைய டுத்து, சட்ட பஞ்சாயத்து இயக்கத் தினர் போராட்டத்தை கைவிட்டு கோட்டூர்புரம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்