கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலி: கறிக்கோழி வாகனங்கள் தமிழகத்துக்குள் அனுமதி இல்லை- கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி இருப்பதைத் தொடர்ந்து அங்கிருந்து தமிழகத் துக்கு கறிக்கோழி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட் டத்தில் உள்ள ஹாம்நாத், மோகராகி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த கோழிகளை அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்து, அவற்றை தீயிட்டு எரித்து அழித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் முகாமிட்டுள் ளனர். வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளி லும் பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி மருந்தை தெளித்து வருகின்றனர்.

இந்தப் பணியை தமிழக கால் நடை பராமரிப்புத் துறை இயக்கு நர் ஆபிரஹாம் நேற்று பார்வை யிட்டார். பின்னர், செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி உள்ளதால், தமிழகத்தில் அந்த நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழகத்தில் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கோழிகளை ஏற்றி வரும் வாகனங் களில் உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத் துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கோழிகள் இறந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மறு அறிவிப்பு வெளியிடும் வரை இந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிகைக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து வேலந் தாவலம், மீனாட்சிபுரம், கோபால புரம் சோதனைச் சாவடிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்