கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 19 வழக்கறிஞர்களுக்கு தொழில்புரிய தடை விதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கொலை, போக்ஸோ, போலி ஆவணங்கள் தயாரித்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய, 3 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 19 வழக்கறிஞர்கள் தொழில்புரிய தடை விதித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் சி.ராஜாகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொலை, வன்கொடுமை, போக்ஸோ வழக்குகள், போலி ஆவணங்கள் தயாரித்து மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடு பெற்றது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, குற்ற வழக்கை மறைத்தது, பணியில் இருப்பதை மறைத்தது, சிறைத் தண்டனை பெற்றது, போதைப் பொருள் கடத்தல், போலி வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வழக்கறிஞர்கள் சென்னையைச் சேர்ந்த ஆதிகேசவன், சதீஷ்குமார், முருகையன், விருமாண்டி, ஈரோடு எழிலரசன், நதியா, திருவண்ணாமலை தினேஷ்பாபு, விருத்தாச்சலம் முத்துராஜ், கன்னியாகுமரி பிரபு, திருவள்ளூர் வேலாநந்தன், ராஜேஷ்கண்ணன், திருப்பூர் பார்த்திபன், சேலம் ராஜா, நாகப்பட்டினம் ஆத்தூர் சுரேந்திரன், ஓசூர் மனோகர ரெட்டி, வி.பாரதி, கே.செல்வி, தருமபுரி பாலக்கோடு எம்.சங்கர், புதுச்சேரி அரியாங்குப்பம் ஜெ.லெனின் ஆகியோர், வழக்கறிஞர்களாக எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகக்கூடாது என்றும், வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதித்தும் பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்