கிரானைட் ஊழல் ஜெ., கருணாநிதி மீது ராமகிருஷ்ணன் புகார்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது: அதிமுக தேர்தல் அறிக்கை விவசாயிகளுக்கு பயன்படுவதாக இல்லை. கடுமையான அதிருப்தியை சரிகட்டுவதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யாக உள்ளது. லோக்ஆயுக்தா கொண்டு வருவேன் எனக் கூற அவர்களுக்கு தகுதியுள்ளதா. தவ வாழ்க்கை வாழ்வதாக கூறும் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் ஆயிரம் ஏக்கர் டீ எஸ்டேட் எதற்கு.

வேலைநியமனத்தில் மேலிருந்து கீழ் வரை ஊழல் உள்ளது. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. அமைச்சர்கள் மீதும் வழக்கு உள்ளது.

அதேபோல் கருணாநிதியின் குடும்பமே ஊழல் வழக்கை சந்தித்து வருகிறது.

கிரானைட் ஊழல் பற்றி சகாயம் அறிக்கையில் கூறியுள்ளபடி, கடந்த இருபது ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. இதற்கு ஜெயலலிதா, கருணாநிதி தான் பொறுப்பேற்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். இவர்கள் சம்பாதித்த சொத்துகளை பறிமுதல் செய்வோம். கூட்டணி ஆட்சித்தான் அரசியல் மாற்றம். மதுவிலக்கு அமல்படுத்த இரு கட்சிகளுக்கும் தகுதியில்லை. இந்த இருகட்சியினரும் நடத்தும் ஆலைகளை இன்றே மூடினால் தான் மக்கள் நம்புவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

14 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்