நடிகர் கார்த்திக் தலைமையில் புதிய கூட்டணி: தமிழகம், புதுவையில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி

By செய்திப்பிரிவு

திமுக, அதிமுக-வுக்கு மாற்று எங்கள் விடியல் கூட்டணிதான் என நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் விடியல் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.

நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் விடியல் கூட்டணி எனும் பெயரில் மேலும் ஒரு அணி தமிழகத்தில் உருவாகியுள்ளது. சென்னையில் இந்த கூட்டணியை நேற்று அறிமுகம் செய்து வைத்து கார்த்திக் நிருபர்களிடம் பேசியதாவது:

எங்கள் அணி வட்டமேசை அணி. இதில் அனைவருக்கும் சம உரிமையும், சமத்துவமும் உள்ளது. நாங்கள் ஊழலற்ற, சமத்துவம் நிறைந்த ஆட்சியை கொண்டு வருவதற்காக விடியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

எங்கள் அணியில் நாடாளும் மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி, மக்கள் மாநாட்டு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தலித் சேனா மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய 6 கட்சிகள் இனைந்துள்ளன. இன் னும் சில கட்சிகளுடன் பேசி வரு கிறோம். இரண்டொரு நாளில் இந்த அணியின் செயல் திட்டம் மற்றும் கொள்கை முடிவுகளை செய்தியாளர்களிடம் அறிவிப் போம்.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் எங்கள் விடியல் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

எந்த தொகுதியில் போட்டி யிடுவது என்பது குறித்து கலந்து ஆலோசனை செய்து அறிவிப்போம்.

திமுக, அதிமுக அல்லாத மாற்று கட்சிகளை தேடிய தமிழக மக்களுக்கு உண்மையான புதிய மாற்று எங்கள் அணிதான். அந்த கட்சியினருடன் நாங்கள் கூட்டணி வைக்க விரும்பியது அவர்களை திருத்துவதற்காகத்தான். அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதால் விடியல் கூட்டணியை தொடங்கி யுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்