வேளாண் துறை மேம்பாட்டுக்காக திமுகவின் அடுக்கடுக்கான வாக்குறுதிகள்: விவசாய சங்கங்கள் கருத்து

By செய்திப்பிரிவு

வேளாண்மைக்கு தனி பட்ஜெட், இயற்கை விவசாயத்துக்கு முன்னு ரிமை, நெல், கரும்புக்கான உற்பத்தி செலவை கணக்கிட்டு கூடுதல் விலை அறிவிக்கப்படும் என்பது வர வேற்கக்கூடியது. சிறு, குறு விவ சாயிகளுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களை யும் தள்ளுபடி செய்ய வேண்டும். டெல் டாவில் மீத்தேன், எரிவாயு, ஷேல் காஸ் ஆகிய திட்டங்களை அமல்படுத்தாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆறுபாதி கல்யாணம் (பொதுச்செயலாளர், டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு):

அனைத்து விவசாயிகளின் கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எவ்வளவு தொகை தள்ளுபடி செய் யப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும். நெல், கரும்புக்கான விலையை உற்பத்தி செலவோடு 50 சதவீத லாபம் சேர்த்து நிர்ணயிக்க வேண் டும். நீர்பாசனத்துக்கு தனி அமைச்சர் நியமனம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்பது வரவேற்கத்தக்கது. வேளாண்துறையை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையாக மாற்ற வேண்டும்.

எஸ்.ஜனகராஜன் (பேராசிரியர், சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்)

திமுக தேர்தல் அறிக்கையில் இல வசங்கள் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். மாறாக, இந்த தேர்தல் அறிக்கையை கடுமையாக உழைத்தும் சிந்தித்தும் உருவாக்கியுள்ளனர். விவ சாயிகள் தற்கொலைக்கு காரணமான கடன் தொல்லைக்கு தீர்வு, நெல் மற்றும் கரும்புக்கு உயர்த்தப்பட்ட ஆதரவு விலை, தேசிய நதிகள் இணைப்பை பேசாமல், மாநில நதிகளை இணைப்பது, மாவட்ட வாரியாக சீர மைக்கப்பட உள்ள நீர்நிலைகள் விவரம் இடம்பெற்றிருப்பது, எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம், நீர் மேலாண்மை ஆணையம், சென்னை வெள்ள தடுப்பு மேலாண்மை குழு அமைப்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

சி.ராமசாமி, (முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்):

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு பயன் இல்லை. பொது பட்ஜெட்டில் விவசாயத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்து, பயனுள்ள வழியில் செலவிடப்படுகிறது என்பதுதான் முக்கி யம். நெல், கரும்புக்கு ஆதார விலையை அதிகரிப்பது விவசாயிகளுக்கு நிச்ச யமாக பயனளிக்கும். பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு கூட்டுறவு வங்கி யில் மட்டும் சாத்தியம். தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் சிரமம்.

பூ.விசுவநாதன், (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்):

பாரம்பரிய ஏரிகளை புனரமைக்க ரூ.10 ஆயிரம் கோடி, 200 தடுப்பணைகள் கட்ட ரூ.2 ஆயிரம் கோடி, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், நீர்பாசன துறைக்கு தனி அமைச்சர், நெல் குவிண்டாலுக்கு ஆதரவு விலையாக ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.3,500 என நிர்ணயம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று இருப்பது விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

ப.லிங்கசாமி (திருப்பூர் மாவட்ட விவசாயி):

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு, கல்விக் கடன் ரத்து, வேளாண்மைக்கு தனி பட்ஜெட், இயற்கை வேளாண்மை ஆய்வு மையம், நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகிய விஷயங்களை வரவேற்கிறோம்.

சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் (செயலாளர், தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்):

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் வரவேற்கத்தக்கது. பயிர்க்கடனை மட்டும் தள்ளுபடி செய்யாமல் அனைத்து விவசாயம் சார்ந்த கடன்களையும் பாகு பாடு பார்க்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும். மழை நீரை சேமிக்க ஆறுகளில் கதவணைகள் அமைக்கப் படும் என்ற அறிவிப்பு வரவேற் கக்கூடியது. நெல், கரும்புக்கான விலை அறிவிப்பு எப்போது என கால நிர்ணயம் செய்ய வேண்டும். மொத்தத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த பல நல்ல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜானகிராமன் (இயற்கை விவசாயி, மதுரை):

வேளாண்மைக்கு தனி பட்ஜெட், நீர்ப்பாசன திட்டங்களுக்கு தனி அமைச் சகம், கடன் தள்ளுபடி ஆகியவை வரவேற்கத்தக்கது. நிலையில்லா விலையால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பதை தீர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு எல்லா மானியங்களும் நேரடியாக கிடைக்க வேண்டும்.

பழனிச்சாமி, (மாநிலத் தலைவர், கரும்பு விவசாயிகள் சங்கம்):

கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய திமுக ஆட்சியில் பலகட்ட போராட்டம் நடத்தியும் பலனில்லை. கரும்பு விவ சாயிகளுக்கு தரவேண்டிய நிலு வைத்தொகை ரூ.1,100 கோடி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. நெல்லுக்கு ரூ.50 கூடுதலாக வழங்கவே மாநில அரசுகள் திணறும் நிலையில் ரூ.2,500 வழங்கப்படும் என்பதை நம்பவே முடியவில்லை. பல அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளன.

ஏ.பி.ரவீந்திரன், (மாநில செயலாளர், விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் - சிதம்பரம், கடலூர் மாவட்டம்):

நெல், கரும்புக்கு ஆதரவு விலையை மத்திய அரசுதான் நிர்ணயிக்க முடியும். மாநில அரசு ஊக்கத் தொகை மட்டுமே வழங்க முடியும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் மைக்கு தனி பட்ஜெட், நீர் பாசன திட்டங்களுக்கு தனி அமைச்சகம் என் பது வரவேற்கத்தக்கது. சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

செ.நல்லசாமி (செயலாளர், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு):

திமுக தேர்தல் அறிக்கையில், விவசாய கமிஷனின் பரிந்துரையை நடை முறைப்படுத்துவோம் என்று அறி விக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட், 24 மணி நேர மும்முனை மின்சாரம், புதிய மின் இணைப்பு ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கது. விவசாய கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைச் செய்துவிட்டால் விவசாயிகளுக்கு இலவசம், மானியம், சலுகை, கடன், கடன் தள்ளுபடி என எதுவும் வேண்டாம்.

ந.காஜா முகைதீன் (செயலாளர், நெல்லை மாநகர குளங்கள் பாதுகாப்பு இயக்கம், பாளையங்கோட்டை):

நீராதார திட்டங்களை மேம்படுத்தி விவசாயத்தை வளப்படுத்தும் நடவடிக் கைகள் குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. இருக்கிற நீர் நிலைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்பதுதான் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை. நீர்ப்பாசன திட்டங்களுக்கு தனி அமைச்சகம் உருவாகும்போது எங்களது கோரிக் கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. விவசாயத் துக்கும், குடிநீருக்கும்தான் நீராதாரங் களை பயன்படுத்த வேண்டும், தொழிற் சாலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நிலவளம் கதிரவன் (நல்லான்பிள்ளைபெற்றாள்):

திமுக தேர்தல் அறிக்கை அப்பட்டமான வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டது என்றாலும் சில விசேஷமான பயன் தரக்கூடிய திட்டங்கள் உள்ளதை மறுக்க முடியாது. மாணவர் கல்விக் கடனையும் ரத்து செய்கிறோம் என்பது எப்படி சாத்தியப்படும் என தெரிய வில்லை. மாவட்ட வாரியாக பிரச்சினை களை அணுகிய விதம், விவசாயத்துக்கு தனி பட்ஜட், பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் போன்றவை நல்ல அம்சங்கள்.

ஏ.சி.வெங்கடேசன் (தலைவர், தமிழ்நாடு பசுமை பாதுகாப்பு மக்கள் இயக்கம்):

பல்வேறு விவசாய சங்கங்கள் நீண்டகாலமாக வலியுறுத்திய கோரிக் கைகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பில் சிறு, குறு விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி என்பதை அனைத்து விவசாயிகள் என அறிவிக்க வேண்டும். வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகு புதிய விதிகளை புகுத்தக்கூடாது. சொன்னதை செய்வார்கள் என்ற நம்பிக்கை திமுக மீது இருக்கிறது.

விவசாய சங்கங்கள் கருத்து

ல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்புக்கு குறைந்தபட்ச விலையாக டன்னுக்கு ரூ.3,500, வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக தனி அமைச்சகம், தனி நபர் இழப்பீட்டின் அடிப்படையில் பயிர்க் காப்பீட்டு திட்டம், சிறு, குறு விவசாயிகளின் சாகுபடி கடன் தள்ளுபடி என வேளாண்மைத் துறை மேம்பாட்டுக்காக பல வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் குறித்து பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:

மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் (தமிழ்நாடு காவிரி நீர்பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்) :

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. விவசாயிகள் கடன் தள்ளுபடி, நெல், கரும்புக்கான விலை நிர்ணயம் ஆகியவை மத்திய அரசின் ஒத்து ழைப்பு இல்லாமல் தமிழக அரசால் தன்னிச்சையாக நிறைவேற்ற முடி யாது. அனைத்து விவசாயிகளின் கடன் களையும் பாரபட்சம் பார்க்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கான கால நிர்ணயம் வெளியிட வேண்டும்.

பி.ஆர். பாண்டியன் (தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்):

வேளாண்மைக்கு தனி பட்ஜெட், இயற்கை விவசாயத்துக்கு முன்னு ரிமை, நெல், கரும்புக்கான உற்பத்தி செலவை கணக்கிட்டு கூடுதல் விலை அறிவிக்கப்படும் என்பது வர வேற்கக்கூடியது. சிறு, குறு விவ சாயிகளுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களை யும் தள்ளுபடி செய்ய வேண்டும். டெல் டாவில் மீத்தேன், எரிவாயு, ஷேல் காஸ் ஆகிய திட்டங்களை அமல்படுத்தாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

கருத்துப் பேழை

23 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

35 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்