வளர்ச்சி பணிக்கு மாநில அரசு தடை: பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் பிரச்சாரத்துக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ‘நேஷ னல் ஆப்டிக் பைபர் நெட்ஒர்க்’ திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள ஏழை மக்களும் இன்டெர்நெட் வசதி பெறமுடியும். இத்திட்டத்துக்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு தருகின்றன. ஆனால் தமிழகத்தில் ஆப்டிக் பைபர் கேபிள் பதிக்க மாநில அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளை தமிழக அரசு தடுக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கை தொடர்பாக தமிழகம் இதுவரை ஒப்புதலும் அளிக்க வில்லை. வனப்பகுதிகளில் நீர்த்தேக்கங்கள், மின் வழித்தடங் கள், சாலைகள் அமைக்க ஒப்பு தல் வழங்க மத்திய அரசு தயா ராக இருந்தும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 mins ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

59 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்