சில்லறையாக டெபாசிட் செலுத்திய வேட்பாளர்

By செய்திப்பிரிவு

சென்னை ஐசிஎப் பகுதியை சேர்ந்த வர் விகடகவி என்ற கந்தசாமி. இவர் ‘விகடகவி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக உள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் இவர் சுயேச்சையாக போட்டியிட உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஷெனாய் நகர் புல்லா நிழற்சாலையில் உள்ள மாநகராட்சி 8-வது மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட் டுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து, முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்துவதற்காக ஆயிரம் 10 ரூபாய் நாணயங்களை காவி நிற சுருக்குப் பையில் எடுத்து வந்தார். அந்த நாணயங்களை தேர்தல் அலுவலக பணியாளர்கள் எண்ணிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி பி.குமாரவேல் பாண்டிய னிடம் கந்தசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சிப்காட் மக்கள் தொடர்பு அதிகாரி அம்பலவாணன் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

27 mins ago

வணிகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்