தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினை: டெல்லியில் இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு

தமிழக- இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமையில் மீனவர் பிரதிநிதிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படு வதும், சிறைப்பிடிக்கப்படுவதும் பின்னர் மத்திய, மாநில அரசு களின் பரஸ்பர பேச்சுவார்த்தைக் குப் பின்னர் மீனவர்கள் விடுவிக் கப்படுவதும் தொடர்ந்து நடைபெறு கிறது. தற்போது இலங்கை சிறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த 96 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் சிறைப்பிடிக்கப் பட்ட 82 படகுகளும் விடுவிக்கப் படவில்லை.

தமிழக மீனவர்கள் தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடிப்பது டன், கடல் வளங்களை அழித்து வருவதாகவும், இதனால் யாழ்ப்பா ணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங் களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படு வதாகவும் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின் றனர். இதனால் இருநாட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த மாதம் இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மீனவர் பிரச் சினை குறித்து பேசுவதற்காக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீராவுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண, மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன்சிங் தலைமையில் மீனவப் பிரதிநிதிகளு டனான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள ‘கிருஷி பவன்’ அலுவலகத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ தலைமையில் மீனவப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சினிமா

28 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

47 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்