ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி போராடியவர்கள் மீதான வழக்கை விசாரிக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீதானவழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத் தலைவர் சுமதி உட்பட பலர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தமனு: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மக்கள்போராட்டம் காரணமாக மூடப்பட்டது.

கரோனா 2-ம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உச்ச நீதிமன்ற அனுமதியின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதி ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் கரோனா 3-வது அலை ஏற்பட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது, இதனால் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கக் கோரி ஜூலை 27-ம் தேதி ஆலை முன்பு சிலர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் மீது சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலேயே அவர்கள் கூடினர். இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக சிப்காட் போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.22-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

வர்த்தக உலகம்

32 mins ago

இந்தியா

44 secs ago

தமிழகம்

58 mins ago

சினிமா

53 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்