காங்கிரஸுடன் கூட்டணி ஏன்? கனிமொழி விளக்கம்

By செய்திப்பிரிவு

அடிப்படைக் கொள்கைகள் ஒருமித்துப்போவதால் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள ஆலவிளாம்பட்டி கிராமத்தில் மதுவிலக்கு கொள் கையை பல தலைமுறையாகக் கடைப்பிடிக்கின்றனர். நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின்போது இக்கிராமத்துக்கு வந்த திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் பல்நோக்கு அரங்கம் கட்டித்தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று பல்நோக்கு அரங்கம் கட்டித்தருவதாக ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி ரூ.20 லட்சத்தில் பல்நோக்கு அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா அக்கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்றைய சூழலில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அதிமுக ஆட்சியின் செயல்பாடற்ற தன்மை மக்களை விரக்தியின் எல்லைக்கே தள்ளியிருக்கிறது. சில அடிப்படைக் கொள்கைகள் ஒருமித்துப்போவதால் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

விளையாட்டு

56 mins ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்