புதுச்சேரி ஆளுநர் உத்தரவிட்டும் ஊதியம், ஓய்வூதியத்தைத் தராவில்லை: தவிக்கும் அரசு நிதியுதவி, தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டும், 3 மாதங்களாக ஊதியம், ஓய்வூதியத்தை அதிகாரிகள் தராததால், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் கரோனா காலத்திலும் தவித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 32 அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கடந்த 2 வருடங்களாக ஊதியம் மற்றும் ஒய்வூதியம் முறையாக வழங்கப்படாமல் இருந்து வந்தது.

புதுச்சேரி ஆளுநராகத் தமிழிசை பொறுப்பேற்றவுடன், ஆறு மாத ஊதியத்தைத் தர ஆணையிட்டார். மாத ஊதியத்தை, ஓய்வூதியத்தைத் தடையின்றித் தருவதாக உறுதி தந்தார். ஆனால் ஆளுநர் உத்தரவிட்டும் ஊதியம், ஓய்வூதியம் வராமல் கரோனா காலத்தில் தவிப்பதாகப் பல ஆசிரியர்களும் குற்றம் சாட்டினர்.

இதுபற்றி பாத்திமா மேல்நிலைப்பள்ளி ஊழியர் சங்கச் செயலர் மார்ட்டின் கென்னடி கூறுகையில், "ஆளுநர் உத்தரவுப்படி 2020 செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரையிலான ஊதியம் தரப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாத ஊதியம் (டிசம்பர் 2019 முதல் ஆகஸ்ட் 2020 வரை) கல்வித்துறைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி பரிந்துரை கிடைத்தபிறகு தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் முதல் மாத ஊதியம் மற்றும் ஒய்வூதியம் வழங்க கல்வித்துறையின் சார்பாகக் கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நிதித்துறை ஊதியம் வழங்க அனுமதி மறுத்து சம்பளக் கோப்பினை மீண்டும் கல்வித்துறைக்கே திருப்பி அனுப்பிவிட்டது. மாத ஊதியமும் தரவில்லை. நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தையும் முழுமையாகத் தரவில்லை. இதனால் கரோனா காலத்திலும் ஊதியமின்றித் தவிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

க்ரைம்

16 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்