கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் சிறப்பான சேவை: தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கிண்டி அரசு கரோனாமருத்துவமனையில் சிறப்பானமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அர்ப்பணிப்புடன் பணியாற்றிஅனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார் இம் மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் கே.நாராயணசாமி.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. படிப்படியாக தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையம், அனைத்து வசதிகள் கொண்ட கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

மொத்தம் 750 படுக்கைகளில்பெரும்பாலான படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கே.நாராயணசாமி, இந்த மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கரோனா தொற்று2-வது அலை தற்போது தீவிரமடைந்துள்ளதால் மருத்துவமனையின் உள்ளேயும், வெளியேயும் கூடுதல்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமியின் முயற்சியால், மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகளுடன் நுரையீரல் செயல் திறனை அதிகரிக்க பலூன்களை ஊதும் தெரப்பி, மனஅழுத்தத்தைப் போக்க மியூசிக்கல் தெரப்பிஎன பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மேலும், நோயாளிகள் தங்களுடைய நேரத்தைப் பயனுள்ளதாக செலவிடும்வகையில் மருத்துவமனையில் நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தனிமை, சிகிச்சை,தொற்றால் ஏற்பட்ட அச்சம் போன்றவற்றைப் போக்க மனநல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 வேளையும் தரமான உணவுமற்றும் பால், முட்டை, கசாயம்வழங்கப்படுகிறது.

இவைதவிர ஆங்கில மருத்துவத்துடன் தினமும் யோகா - இயற்கை மருத்துவ சிகிச்சைகளான யோகா, நீராவி சிகிச்சை, நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும் பிரணாயாமம்உள்ளிட்ட பல சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஆக்சிஜன் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் படுக்கைகளுக்கே சென்று யோகா - இயற்கை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என பிரபலங்கள்உள்ளிட்ட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இம் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு சிறப்பானசிகிச்சை அளிக்கப்படுவதால், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் முதல் தேர்வாக இந்த மருத்துவமனை உள்ளது.

அர்ப்பணிப்பு உணர்வோடு பல்வேறு வசதிகளைச் செய்து கரோனாநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனை இயக்குநர்கே.நாராயணசாமிக்கும், மருத்துவமனைக்கும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகின்றன.

இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமியிடம் கேட்டபோது, “இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு மருத்துவமனையில் இருப்பதுபோன்றே தெரியாது. தங்களுடையவீடுகளில் இருப்பதைப் போலவேஉணர்கின்றனர். நோயாளிகளுக்குசிகிச்சைகளுடன் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் அடிக்கடி நோயாளிகளின் உடல்நிலையைக் கண்காணிக்கின்றனர். அதனால்தான் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற அனைவரும் விரும்புகின்றனர். தீவிர தொற்று பாதிப்பு,இணை நோய்கள் இருப்பவர்கள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்” என்றார்.

இம் மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பெற்று பூரணமாகக் குணமடைந்த கிஷோர் பட் என்பவர் கூறியதாவது:

கரோனா தொற்று மற்றும் 30 சதவீத நுரையீரல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு நல்ல முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.நான் 5 நாட்கள் சிகிச்சையில் இருந்தேன். தினமும் காலையில் இட்லி, பொங்கல் கொடுத்தனர். 11 மணிக்குகபசுரக் குடிநீர் அல்லது கசாயம், பகல் 12.30 மணிக்கு சாப்பாடு, பிற்பகல் 3 மணிக்கு பால், மாலை 5 மணிக்கு கசாயம், மாலை 5.30 மணிக்கு சூப், இரவு 7.30 மணிக்கு உணவு கொடுக்கின்றனர். மாலையில் முட்டை கொடுக்கின்றனர். உணவுகள் தரமாகவும், சுவையாகவும் இருக்கிறது.

இந்த மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நாராயணசாமி, கரோனா தொற்றைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர். எந்த நோயாளிக்கும் தேவையில்லாமல் மருந்துகொடுக்க மாட்டார். யாருக்கு எப்போது என்ன மருந்து கொடுக்கவேண்டுமென அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார். தினமும் ஒவ்வொரு நோயாளியையும் சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார்.

மருத்துவமனை சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. யோகா -இயற்கை மருத்துவர்கள் தினமும்வந்து யோகா, மூச்சுப் பயிற்சி அளிக்கின்றனர். கரோனா நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் கிடைப்பது போன்ற சிகிச்சை, தனியார் மருத்துவமனையில்கூட கிடைக்காது. அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றிவருகிறார் மருத்துவர் நாராயணசாமி.

தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு செல்வோரிடம், நெருங்கிய உறவினர் போல அவர்களை உற்சாகப்படுத்தி வழியனுப்புகிறார். இதுபோன்ற காட்சிகளை எந்த மருத்துவமனையிலும் நான் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

18 mins ago

கருத்துப் பேழை

26 mins ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

38 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்