காஞ்சிபுரத்தில் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. 2015-ல், சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த உணவகத்தில், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் ஆகியோர் உணவு சாப்பிடுவர். இங்கு விலை குறைவு என்பதால், எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் உணவகத்தை மூடிவிட்டு, சென்றுவிட்டனர். நேற்று காலையில் பெண் ஊழியர்கள் உணவகத்தை திறந்தபோது, மேற்கூரை பெயர்ந்து விழுந்திருந்தது தெரியவந்தது. சுமார் 50 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட மேற்கூரையின் உட்பகுதி பெயர்ந்து விழுந்து, மின் விளக்குகள், மின் விசிறிகள் சேதமடைந்திருந்தன.

இரவு நேரத்தில் விபத்து நேரிட்டதால், யாருக்கும் பாதிப்பு இல்லை. அதேசமயம், உணவகத்தில் கூட்டம் அதிகம் உள்ள நேரத்தில் மேற்கூரை விழுந்திருந்தால், அதிக பாதிப்பு இருந்திருக்கும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் நகராட்சி அலுவலர்கள், பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், நகராட்சி ஆணையர் மகேஸ்வரியும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்