போடியில் துணை முதல்வரின் உதவியாளர் வீட்டில் சோதனை: ரூ.1.50 லட்சத்துடன் முன்னாள் கவுன்சிலர் கைது

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம் போடியில் துணைமுதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனைசெய்தனர். வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்து ரூ.1.50லட்சத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டியில் பிரச்சார வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.28 ஆயிரத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக அதிமுக வேட்பாளர் லோகிராஜன் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம் போடியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் உட்பட 24 பேர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் அதிமுக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் கூறினர்.

இதையடுத்து போடி சுப்புராஜ் நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் அருகே உள்ள வீட்டில் வசிக்கும் தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி என்பவர் வீட்டில் வருமானவரி மண்டல துணை இயக்குநர் பூவலிங்கம் தலைமையிலான குழுவினர் நேற்றுகாலை திடீர் சோதனை நடத்தினர். இதில் பணம் எதுவும் சிக்கவில்லை.

குறிஞ்சிமணி துணை முதல்வர் பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்பி ஆகியோருக்கு உதவியாளராக உள்ளார். அதே சமயம் போடி 11-வது வார்டைச் சேர்ந்த திருமலாபுரத்தில் மாட்டுமந்தை என்ற இடத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தரங்கன் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் கூறப்பட்டது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரை கைது செய்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

தமிழகம்

19 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்