மண் பானை சின்னத்தை பிரபலப்படுத்தும் விசிக

By கி.ஜெயப்பிரகாஷ்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு மண் பானை சின்னம் கிடைத்துள்ளது. இதையடுத்து, 6 தொகுதிகளிலும் மண் பானை சின்னத்தை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக விசிக மாநில செய்தி தொடர்பாளர் கு.க.பாவலன் கூறுகையில், ‘‘சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதால் எங்களது பானை சின்னத்தை மக்களிடம் விரைவில் கொண்டு சேர்க்க முடியும். அதற்கான முழு பணிகளை 6 தொகுதிகளிலும் மேற்கொண்டு வருகிறோம். மண் பானை என்பது கிராமங்களில் மக்கள் அன்றாடமும் பயன்படுத்தும் பொருளாகும். இதுவே, எங்கள் சின்னம் கிராம மக்களை எளிதில் சென்றடையும். சிறப்பு குழுக்களை நியமித்து செல்போன் மற்றும் கணினி மூலமும் எங்களது சின்னத்தை முன்நிறுத்தியும், 6 தொகுதிகளிலும் பல ஆயிரகணக்கான மண் பானைகளோடு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். தெருக்கூத்து, நாடகம், கிராமிய பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்கிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

க்ரைம்

9 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

க்ரைம்

49 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்