வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வெள்ளத்தில் சிக்கியவர்கள்: மீட்பு படையினர் உதவியால் 4 நாட்களுக்கு பிறகு வெளியேறினர்

By செய்திப்பிரிவு

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வெள்ள நீர் சூழ்ந்ததால் கடந்த 4 நாட்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பொதுமக்கள், பேரி டர் மீட்புப் படை உதவியால் நேற்று வீடுகளை விட்டு வெளியேறினர்.

கன மழை காரணமாக வில்லி வாக்கம் ஏரி நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிட்டது. இதனால் வில்லி வாக்கத்தில் உள்ள சிட்கோ நகர், அன்னை சத்யா நகர், பாரதி நகர், அம்மன் கோட்டை நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் வீடுகள் மழை நீரால் சூழப்பட்டன. வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந் தது. இதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை.

தற்போது மழை விட்டுவிட்டதாலும், தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வருவதாலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகளுடன் சென்று நேற்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாலும், 4 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேறி, உறவினர் வீடுகளுக்கும், வெளியூர் களுக்கும் சென்றனர்.

கால்வாயை அடைக்க முயற்சி

அம்பத்தூர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் பகுதிக்குள் செல்வதால், அப்பகுதியில் மழை நீர் வடியவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பாடி மேம்பாலம் அருகில், அம்பத்தூரில் இருந்து கால்வாயில் வரும் நீரை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களைத் தடுக்க ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, அம்பத்தூர் பகுதியில் மழைநீர் வடிந்துவிட்டதால், இனி அங்கிருந்து மழை நீர் வராது என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்