புதுச்சேரியில் 13 தொகுதிகளில் களமிறங்கிய குடும்ப, வாரிசு வேட்பாளர்கள்

By செய்திப்பிரிவு

புதுவையில் மொத்தம் உள்ள 30சட்டப்பேரவை தொகுதிகளில் 13 தொகுதிகளில் குடும்ப, வாரிசுவேட்பாளர்கள் களமிறங்கியுள் ளனர். வாரிசு, குடும்ப அரசியல் அனைத்து மாநிலங்களிலும் பொதுவானது. சிறிய ஊரான புதுச்சேரியும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

* புதுவை அரசியலில் அதிகஆண்டுகள் முதல்வராக இருந் தவர் ரங்கசாமி. இவரது அண்ணன் ஆதிகேசவனின் மருமகன் நமச்சிவாயம். கடந்த 96-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். 3 முறை அமைச் சர் பதவி வகித்த நமச்சிவாயம், தற்போது பாஜக வேட்பாளராக மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.

* புதுவையில் முதல்வர், சபா நாயகர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் பரூக். இவரது மகன் ஷாஜகான். இவர் கடந்த காலங்களில் லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டி யிட்டு வெற்றி பெற்றவர். தற்போது காமராஜ் நகர் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

* காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் சந்திரகாசு. இவரது மகள் சந்திர பிரியங்கா. என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நெடுங்காடு தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதே தொகுதியில் 2-வது முறையாக களமிறங்கியுள்ளார்.

* காரைக்கால் வடக்கு தொகு தியில் காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமுருகன். தற்போது என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் முன்னாள் எம்எல்ஏ நள மகாராஜனின் மகனாவார்.

* காரைக்கால் மாவட்டம் நிரவிதிரு பட்டினம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சபாநா யகர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சிவக்குமார். இவரது மகன்கள்மனோகரன், ராஜகணபதி ஆகியோர் பாஜக வேட்பாளராகவும், சுயேச்சையாகவும் போட்டியிடுகின் றனர். ஒரே தொகுதியில் அண்ணனும், தம்பியும் போட்டியிடுகின்றனர்.

* முன்னாள் எம்எல்ஏ ராமநாத னின் மகன் செந்தில்குமார் பாகூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரது அண்ணன் ராதாகிருஷ்ணன். சபா நாயகர், எம்பி உள்ளிட்ட பதவி களை வகித்தவர்.

* புதுவை கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒரு வர் குருசாமி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். இவரது மகன் பன்னீர்செல்வம். உழவர்கரை தொகுதியில் 3-வது முறையாக என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

* வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த பாஸ்கரன். இவரதுஅண்ணன் மகனான சண்.குமா ரவேல் மங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

* சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வராக இருந்த உத்தரவேலுவின் மகன் லட்சுமிகாந்தன். கடந்த தேர்தலில் ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது 2-வது முறையாக என்ஆர் காங்கிரஸ் வேட்பா ளராக போட்டியிடுகிறார்.

* உத்தரவேலுவின் தம்பியும்,முன்னாள் அமைச்சருமான ராஜ வேலு தற்போது நெட்டப்பாக்கம் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

* நெல்லிதோப்பு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங் கியுள்ள விவிலியன் ரிச்சர்ட்ஸ் அரசியலுக்கு புதுமுகம். இவரது தந்தை முன்னாள் எம்எல்ஏ ஜான் குமார்.

* காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய மூர்த்தியின் தம்பி ஆனந்தன். மணவெளி தொகுதியில் காங் கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர்கொம்யூன் பஞ்சாயத்து தலை வராகவும் இருந்துள்ளார்.

* உப்பளம் தொகுதியில் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்பழகன். இவரது தம்பி பாஸ்கர் 3-வது முறையாக முதலியார்பேட்டை தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்