தமிழகத்தில் 15% பேருக்கு சர்க்கரை நோய்: சிறுநீரகம், இதயம் பாதிக்கும் அபாயம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 15 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினக் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. சர்க்கரை நோய் துறை பேராசிரியர் மு.செந்தில் தலைமை வகித்தார். சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்கள் சுப்பையா ஏகப்பன், பழனிகுமரன், மணிமேகலை மற்றும் சர்க்கரை நோயாளிகள் கலந்து கொண்டனர். நோயாளிகளின் சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

சர்க்கரை நோய் துறை பேராசிரியர் மு.செந்தில் பேசியதாவது:

உலகின் சர்க்கரை நோய் தலைநகரம் என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தொற்றா நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இந்த சோதனையில், தமிழகத்தில் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக் கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

சர்க்கரை நோய் ஆரம்பநிலை யில் எந்த அறிகுறியும் இன்றி இருப்பதால் பலர் தங்களுக்கு இந்நோய் இருப்பதை அறியாமல் இருக்கின்றனர். நோய் கண்டறி யாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்த வர்கள் பின்னாளில் இதயம், சிறு நீரகம் போன்ற முக்கிய உறுப்பு கள் பாதிப்படைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.

இன்றைய இயந்திர வாழ்க்கை முறை, அதிக மாவுச்சத்து, கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், நொறுக்கு தீனிகள், வயிறு தொப்பை, உடல் உழைப்பின்மை, உடல் பருமன், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் சர்க்கரை நோய் வருகிறது என்றார்.

மருத்துவமனை கண்காணிப்பா ளர் டாக்டர் வீர சேகரன் பேசும்போது, மாத்திரை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் குணமாகிவிடும் என நினைப் பது தவறு. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள், பரிசோதனை ஆகிய நான்குமே சர்க்கரை நோய் அளவை குறைக்கும் என்றார்.

டாக்டர் பழனி குமார் பேசியதாவது:

சிகிச்சையை பின்பற்றாவிட்டால் சர்க்கரை நோயால் கண்கள், சிறுநீரகம், இதயம், நரம்புகளில் பாதிப்பு ஏற்படக்கூடும். தொற்று கிருமிகள் வந்து காசநோய் வரலாம். மாரடைப்பு அறிகுறியே இல்லாமல் திடீரென்று ஏற்படலாம்.

பக்கவாதம், ரத்தக் குழாய் அடைப்பு, கண் விழித்திரை பாதிப்பு, ரத்தக்கசிவு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள் சிகரெட், மது தொடவே கூடாது. கால்கள் செயல் இழந்து உணர்ச்சியில்லாமல் இருக்கும். மனச்சோர்வு, அழுத்தம் போன்றவை சர்க்கரை நோய் வீரியத்தை அதிகப்படுத்தலாம் என்றார்.

நோயாளிகள் என்ன சாப்பிடலாம்

உணவு, ஊட்டச்சத்து கல்வியாளர் தினேஷ் கூறுகையில், தண்ணீரைத் தவிர சர்க்கரை இல்லாத உணவுகளே இல்லை. சர்க்கரை அளவு குறைந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதால் அந்நோயின் அளவு குறையும். உணவுகளை நேரத்துக்கு சாப்பிட வேண்டும். காலை உணவை 8.30 மணிக்கும், காலை சிற்றுண்டியை 11 மணிக்கும், மதிய உணவை 1.30 மணிக்கும், மாலை சிற்றுண்டியை 5 மணிக்கும், இரவு உணவை 8.30 மணிக்கும் சீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும்.

இந்த தலைமுறையினர் நேரமில்லை என சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அதனாலே சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாகியுள்ளது. மா, பலா, வாழை, சப்போட்டா, திராட்சை, சீத்தாப் பழங்களை சாப்பிடவே கூடாது. காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம். இறைச்சியில் சிக்கன், மீன் அளவாக சாப்பிடலாம். ஈரல் சாப்பிடவே கூடாது. ஜுஸ், கஞ்சி, பழைய சோறு உள்ளிட்ட தண்ணீர் உணவுகளை சாப்பிடக்கூடாது. திடமான உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும். வடை, போண்டா, பக்கோடா, பப்ஸ் உள்ளிட்ட எண்ணெய் பலகாரங்களை உட்கொள்ளக் கூடாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

20 mins ago

க்ரைம்

24 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்