கல்பாக்கம் நிலா கமிட்டியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

By கோ.கார்த்திக்

கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் பத்திரப்பதிவுக்குத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலையம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக சுற்றுப்புற 5 கி.மீ., தொலைவுக்கு வரும் மாமல்லபுரம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமப்பகுதிகளை நிலா கமிட்டி வரையறு செய்துள்ளது. மேலும், பேரிடர் மற்றும் அவசரகாலங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், வரையறு எல்லையில் உள்ள குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என, நிலா கமிட்டி உறுப்பினர் செயலாளர் அரசாணை வெளியிட்டார்.

இது குறித்த தகவல்கள் பரவியதை தொடர்ந்து, நிலா கமிட்டியின் உத்தரவுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக, நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்பேரில், மாமல்லபுரம், புதுப்பட்டினம், அணுபுரம், கல்பாக்கம் நகரியப்பகுதி உள்பட பாதிக்கப்பட்ட 14 கிராமங்களில் குடியிருப்புகளில் இன்று (மார்ச் 4) கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால், அணுமின் நிலைய நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்