தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கோவனை சிறையில் அடைக்க மாட்டோம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By செய்திப்பிரிவு

மக்கள் கலை இலக்கிய கழகத் தின் பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோவன் மகன் சாருவாகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் நாட் டுப்புறப் பாடகராக உள்ள எனது தந்தை கோவன், டாஸ்மாக் கடை களுக்கு எதிராக பாடல் இயற்றி பாடியதற்காக, புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் தந்தை சமூக விரோதியோ, தேசத் துரோகம் இழைத்தவரோ இல்லை. அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று இம்மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு அட்வ கேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, வரும் 17-ம் தேதி வரை தேசிய பாதுகாப்பு சட்டத் தின் கீழ் கோவன் கைது செய்யப்பட மாட்டார் என்று தெரிவித்தார். இதையடுத்து, அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, 17-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்