அரசு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போலி ஆவணங்கள் மூலம் இழப்பீடு பெற்று மோசடி: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மலேசியாவில் குடியேறிய சையது சமீர் உள்ளிட்ட 4 பேருக்கு, திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவர்கள் தங்களது சொத்துகளை பராமரிக்க பரூக் அஹமது என்பவரை நியமித்துள்ளனர்.

ஆனால் பரூக் அஹமது இந்தநிலங்களை போலி ஆவணம் மூலம் மூன்றாவது நபர்களுக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார். அத்துடன், அரசு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கும் தானே உரிமையாளர் என போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடிக்கும் அதிகமாக இழப்பீடு பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதையறிந்த நில உரிமையாளர்கள் அளித்த புகாரின்பேரில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட அரசு அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவில்லை எனக்கூறி நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிஎன்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாகநடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்துநீதிபதி, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் தீவிரம்,அரசு அலுவலர்களின் தொடர்பைமுழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது எனக் கூறி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிஉத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

கருத்துப் பேழை

22 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

34 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்