அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது; மும்பையில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மும்பையில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மருத்துவமனை இயக்குநர் விமலாதலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. 24 லட்சம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புகுறைந்து வந்தாலும், அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துவருகிறது. எல்லை மாவட்டங்களில்கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம். காய்ச்சல் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் பாதிப்பு இல்லை என்றாலும்கூட ஓசூர், திருவள்ளூர், சித்தூர் பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனாபரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பலர் மும்பைக்கு சென்றுவருபவர்களாக உள்ளனர். அவ்வாறு வருபவர்களை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் ஆங்காங்கே டெங்கு பரவத் தொடங்கியுள்ளது. தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் சிலருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

இந்தியா

52 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்