புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்கிரஸ்?- பிப்.22-ல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் வரும் திங்கட்கிழமை 22ம் தேதி மாலை 5 மணிக்குள் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அடுத்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் ஒரே சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி எதிர்கட்சிகள் முதல்வர் நாராயணசாமியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.

தொடர்ந்து துணைநிலை ஆளுநர் இடம் சட்டப்பேரவையைக் கூட்டி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து நேற்று மாலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று என உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 22ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி 14வது சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

வரும் 21ஆம் தேதி மாலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை கலைக்குமா அல்லது கூட்டப்பட்டுள்ள சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பெரும்பான்மையை நிரூபிக்குமா எனத் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்