கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்: மேம்பாலம் வலுவிழந்ததால் போக்குவரத்தில் மாற்றம்

By செய்திப்பிரிவு

கொட்டித் தீர்த்த கனமழையால் ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மப்பள்ளி தடுப்பணை நிரம்பியது. இதனால், கடந்த 5 நாட்களுக்கு மேலாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இச்சூழலில், சென்னை- திருப் பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே நாராயணபுரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி வலுவிழந்தது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர் பகுதியில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் வாகனங்கள், திருவாலங்காடு வழியாகச் சென்று வந்தன.

இந்நிலையில் நேற்று மதியம் கே.கே. சத்திரத்தில் இருந்து திரு வாலங்காடு செல்லும் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் ஒரு பகுதி வெள்ள பெருக்கால் வலுவிழந் தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி கோட்டாட்சியர் சேதுமாதவன், வட்டாட்சியர் கணேசன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர்.

இதில் பாலத்தின் ஒரு தூண் பகுதி வலுவிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து கே.கே. சத்திரம்-திருவாலங்காடு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது சென்னை, திருவள்ளூர், திருப்பதி பகுதிகளுக்கு திருத்தணி-அரக்கோணம் மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்