கடலூரில் ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புயல் தடுப்புக்காகவும், கட்டமைப்பு களுக்காகவும் கடலூரில் ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ள தாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி யின் சாதனைகள் குறித்த ‘மோடி யின் விதை’ என்ற குறும்பட சிடி-யை கோவையில் உள்ள ஈச்சனாரியில் வெளியிட்ட பின்பு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியா முழுவதும் வெளியிடப் படும் ‘மோடியின் விதை’ குறும்படம், இளைஞர் அணி மற்றும் ‘மேக் இன் இண்டியா’ திட்டம் மூலமாக அனைத்து மொழிகளிலும் வெளிவர உள்ளது. முதல்முறையாக தமிழில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத மாற்று சக்தி உருவாக வேண்டும் என்ற தேவையை பாஜக அங்கம் வகிக்கும் அணியால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியும். என்னைப் பொறுத்தவரை, 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும். இதுதான் மக்களின் விருப்பமாகவும் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் 2 இடங்களைக்கூட பெறாதபோது பாஜகவும், பாமகவும் தலா ஒரு இடத்தைப் பெற்றன. 19.5 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

எனவே, அதே கூட்டணி தொடர வேண்டும். மக்கள் நலக் கூட்டணி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

கடலூர் வெள்ளச் சேதத்தை பார்த்துவிட்டு திரும்பும்போது, சென்னை நகரம் மற்றொரு கடல் ஊராக இருந்தது. கடலூரையும், சென்னையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவில் கட்ட மைப்புகள் உள்ளன. இதில், ஆட்சி யாளர்கள் கவனம் செலுத்த வில்லை.

புயல் தடுப்புக்காகவும், கட்ட மைப்புகளுக்காகவும் கடலூரில் ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அங் குள்ள நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள் ளோம். அதேசமயம், மாநில அரசும் இழப்பு அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

நடைமுறையில் செய்ய வேண் டியதை தமிழக அரசு செய்ய வேண் டும். ஆர்.கே.நகர் தொகுதிக்காவது முதல்வர் நேரில் சென்று மக்களின் நிலையை பார்வையிட வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி, புதிய வீடுகள், பேரிடர் தாக்கும் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு பாஜக ஆதரவு தெரிவிக் கிறது.

இழப்பீடுகளுக்காக போராடும் மக்கள் மீது காவல்துறை அடக்கு முறையோடு நடந்துகொள்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு டிவிட்டர் இணைய தளத்தில் தனது வருத்தத்தையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை யும் தெரிவித்துவிட்டுதான், பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். மத்திய அரசின் நிவாரணம் நிச்சயம் கிடைக் கும்.

மதுரையில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடந் திருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் திட்டம், தமிழகம் முழுவ தும் எந்தெந்த அளவில் உள்ளது என்பதை அரசு விரிவாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்