அதிமுக 44-வது ஆண்டு தொடக்க விழா: 3 நாட்கள் கூட்டம் நடத்த அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி வரும் 17-ம் தேதியுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்து, 44-வது ஆண்டு தொடங்குகிறது.

முதல்வர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம் கோடநாடு சென்றுள்ளார். சில வாரங்கள் அங்கு தங்கியிருப்பார் என்றும், அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. இந்நிலையில், அதிமுக 44-ம் ஆண்டு தொடக்க விழா, நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘அதிமுகவின் 44-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோத்தகிரி பேரூராட்சி டானிங்டனில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா 17-ம் தேதி (நாளை) மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, விழா மலரையும் வெளியிடுகிறார்’ என்று தெரிவித்துள்ளது.

கட்சி தொடக்க விழாவை முன் னிட்டு தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுகவின் 44- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். மேலும் 17-ம் தேதி ஆங்காங்கே கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்