எட்டு மாதங்களுக்கு பிறகு பழநி மலைக்கோயிலுக்கு மின் இழுவை ரயில் இயக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால், கடந்த 8 மாதங்களாக பழநி மலைக்கோயிலுக்கு இயக்கப்படாமல் இருந்த மின் இழுவை ரயில் நேற்று 50 சதவீத பக்தர்களுடன் இயக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்குச் செல்ல இயக்கப்படும் மின் இழுவை ரயில் (வின்ச்), கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் இயக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் ரோப்கார், மின் இழுவை ரயில் இயக்கப்படாததால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல படிப்பாதையை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

தற்போது மேலும் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் 50 சதவீத பயணிகளுடன், மின் இழுவை ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மின் இழுவை ரயிலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மின்இழுவை ரயில் சேவையைத் தொடங்கி வைத்தனர். ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

மின் இழுவை ரயில் இயக்கப்பட்டதால், கடந்த 8 மாதங்களாக மலைக்கோயில் செல்லமுடியாத முதியவர்கள், சிறுவர்கள் தற்போது மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்யமுடியும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்