தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டுப்பாடு நீக்கம்

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம் வழியே கேரளா செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு வெளி யிடப்பட்ட இந்த உத்தரவால் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

தமிழக-கேரள எல்லையாக குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இந்த வழித்தடங்களில் கடந்த மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மற்றும் ஆறு மாதத்துக்கான இ-பாஸ் வழங்கப்பட்டது.

ஒருநாள் இ-பாஸ் பெற்றவர்கள் மாலைக்குள் திரும்பி வந்துவிட வேண்டும். மருத்துவப் பரி சோதனை, ஆவணம் சரி பார்ப்பு போன்றவற்றுக்காக வருவாய், சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் தனித்தனியே சோதனை மேற்கொண்டனர்.

இதனால் தாமதம் ஏற்பட்டது. எனவே விதிமுறையில் தளர்வு வேண்டும் என்று விவசாயிகளும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கேரள அரசு இ-பாஸில் மேலும் தளர்வுகளை அளித்துள்ளது. இதன்படி குமுளி, போடிமெட்டு வழியாக கேரளா செல்பவர்கள் இ-பாஸ் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணி களும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10 மாதங் களுக்குப் பிறகு மாநில எல் லையை இயல்பாகக் கடந்து செல்லும் நிலையை வாகன ஓட்டி கள் வரவேற்றுள்ளனர்.

எல்லையில் முகாமிட்டிருந்த கேரள சுகாதார, வருவாய்த் துறையினரும் தங்கள் வழக்க மான பணியிடங்களுக்கு திரும்பிச் சென்றனர். அதேநேரம் கம்பம்மெட்டு வழியாக சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப் படுகின்றன.

அந்த வழித்தடத்திலும் இ-பாஸ் நடைமுறையை ரத்துசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்