தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளால் 80% வட மாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்கு திரும்பினர்

By செய்திப்பிரிவு

தமிழக கட்டுமானப் பணிகளில்ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். செக்யூரிட்டி, ஓட்டல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இன்னமும் வரவில்லை.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பணிபுரிந்த லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பேருந்துகள், ரயில்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தற்போது கரோனா ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் முழுவதுமாக தமிழகம் திரும்பவில்லை.

அதேநேரத்தில் வேலைக்கு உத்தரவாதம், பாதுகாப்பான தங்குமிட வசதி, உரிய ஊதியம் போன்றகாரணங்களால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெரும்பாலானவெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

மீண்டுவரும் ரியல் எஸ்டேட்

இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுச் சங்க கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை பிரிவு முன்னாள் தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப் கூறியதாவது:

கட்டுமானத் தொழிலைப் பொருத்தவரை ஒப்பந்ததாரரே வடமாநிலத் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். தங்குவதற்கு அவர்களே ஏற்பாடுகள்செய்கின்றனர்.

கட்டுமான வேலை நடக்கும் இடத்திலேயே தங்க விரும்பினால் குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இதற்கென தனியாக பணம் வாங்கமாட்டோம். வடமாநிலத் தொழிலாளர்களுக்கு இதற்கு முன்பு கொடுத்த அளவுக்கு ஊதியம் தருகிறோம்.

வடமாநிலத் தொழிலாளர்கள் 80 சதவீதம் பேர் வேலைக்கு வந்துவிட்டனர். அவர்களும் 6 மாதம் முதல் 8 மாதங்கள் வரைதான் பணியாற்றுவார்கள். வெகு சிலரே குடும்பத்துடன் வந்துள்ளனர். 4 ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வந்த ரியல் எஸ்டேட் தொழில் கடந்த 2 மாதங்களாக மீ்ண்டு வந்து கொண்டிருக்கிறது. பழையவீட்டு வசதித் திட்டங்கள் மட்டுமல்லாமல் புதிய வீட்டு வசதித் திட்டங்களையும் பலரும் தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

சினிமா

39 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

46 mins ago

சுற்றுலா

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

26 mins ago

மேலும்