புதுச்சேரி அம்பேத்கர் மணிமண்டபத்தில் பவுத்த முறைப்படி காதல் ஜோடி திருமணம்

By செய்திப்பிரிவு

அம்பேத்கர் மணி மண்டபத்தில் பவுத்த முறைப்படி சாதி மறுப்பு திருமணம் நடந்தது. அனுமதி பெறாமல் கரோனா காலத்தில் ஏராளமானோர் அங்கு கூடியதால் போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர்.

புதுச்சேரி பிச்சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் லிங்க சுப்பிரமணியன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கல்லூரியில் படிக்கும் போது வேல்ராம் பேட்டைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடி வெடுத்தனர். இதுகுறித்து தங்கள் வீடுகளில் தெரிவித்தபோது லிங்க சுப்பிரமணியன் குடும்பத்தினர் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஹேமலதா வீட்டில் அனுமதிக் கவில்லை. ஹேமலதா வீட்டை விட்டு வெளியேறி லிங்க சுப்பிரமணியன் வீட்டில் தஞ்சமடைந்தார். லிங்க சுப்பிரமணியனின் தந்தையான இந்திய குடியரசுக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவக் குமார், திருமணத்தை நடத்த முடிவு எடுத்தார்.

புதுச்சேரி கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நேற்று பவுத்த முறைப்படி திருமணம் நடந்தது. நுழைவு வாயிலில் உள்ள புத்தர் சிலையின் அருகே ஜோடிகள் இருவரும் சாதி மறுப்பு, திருமண உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் அம்பேத்கர் சிலையின் முன்பு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. புத்த பிட்சு இருவருக்கும் திரு மணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு பவுத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

திருமண விழாவுக்கு ஏராளமானோர் அங்கு வந்ததகவலறிந்து பெரியக்கடை போலீஸார் அங்கு வந் தனர். அம்பேத்கர் மண்டபத்தில் திருமணம் நடந்ததா எனபோலீஸார் விசாரித்தனர். இதற்கிடையே திருமணம் நிகழ்வில் பங்கேற்றோர் அங்கிருந்து சென்று விட் டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்