‘இந்து தமிழ் திசை’, ‘கிராண்ட்மாஸ் டேல்ஸ்’ இணைந்து நடத்தும் ‘நெருப்பில்லா சமையல்’: குழந்தைகளுக்கான ஆன்லைன் பயிற்சி வரும் நவ.7-ம் தேதி நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘கிராண்ட்மாஸ் டேல்ஸ்’ உடன் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான ‘நெருப்பில்லா சமையல்’ இணையவழி பயிற்சி வரும் நவம்பர் 7 (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் வானியல் முகாம், அபாகஸ் முகாம், விவசாய முகாம் (லிட்டில் ஃபார்மர்), எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரையாடல் (வெப்பினார்) என பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், ‘கிராண்ட்மாஸ் டேல்ஸ்’ உடன் இணைந்து ‘நெருப்பில்லா சமையல்’ எனும் குழந்தைகளுக்கான இணையவழி சமையல் பயிற்சி வரும் நவம்பர் 7 (சனிக்கிழமை) அன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வை புகழ்பெற்ற சமையல் கலைஞர் சஹானா ராகுல் வழங்கவிருக்கிறார். இதில், ஐந்துக்கும் மேற்பட்ட சுவையான ரெசிபிகள் தயாரிப்பது குறித்து பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். இந்த நிகழ்வில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம். குழந்தைகளுடன் பெற்றோர்களும் இணைந்து பங்கேற்கலாம். இதில் பங்கேற்க பதிவு கட்டணம் ரூ.590 செலுத்தி, https://connect.hindutamil.in/event/66-cook-without-fire.html என்ற லிங்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

41 mins ago

க்ரைம்

45 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்