பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக, கேரள ஒற்றுமையை பறைசாற்றும் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்வு; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்கள் பவனி

By எல்.மோகன்

தமிழக, கேரள ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய நிகழ்வான மன்னரின் உடைவாள் மாற்றுதல், திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு சுவாமி விக்ரகங்கள் பவனி புறப்பாடு ஆகியவை பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தே சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னரின் காலத்தில் இருந்து இவ்விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் பவனியாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முதலில் ஒரே நாளில் திருவனந்தபுரத்திற்கு வாகனத்தில் சுவாமி விக்ரகங்களை கொண்டு செல்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள், மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதால் தமிழக, கேரள அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய முறைப்படி நவராத்திரி பவனியை சமூக இடைவெளியுடன் நடத்தவும், யானை, குதிரை பவனியை தவிர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் பவனியாக பத்மநாபபுரம் அரண்மனை கொண்டு வரப்பட்டது. இதைப்போல் வேளிமலை முருகன் விக்ரகமும் இன்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை பராம்பரிய முறைப்படி தமிழக, கேரள ஒன்றுமையை பறைசாற்றும் மன்னரின் உடவாள் மாற்றும் நிகழ்ச்சி பத்மநாபபரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடைபெற்றது.

அரண்மனையில் பாதுகாத்து வைக்கப்பட்டு வரும் மன்னரின் உடைவாளை அரண்மனையின் கண்காணிப்பாளர் அஜித்குமார் எடுத்து வந்து கேரள தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனிடம் வழங்கினார். அவர், குமரி திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணியிடம் வாளை வழங்கினார். பின்னர் உடைவாளை தேவசம் ஊழியர் மோகனகுமார் பெற்றுக்கொண்டார். சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் பவனியின்போது இந்த உடைவாளை ஏந்தியவாறு செல்வர்.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட இந்து அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், மற்றும் இரு மாநில

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து தேவாரக்கட்டு சரஸ்தி, வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் முன்பு உடைவாள் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் ஊர்வலம் புறப்பட்டதும், பத்மநாபபுரம் அரண்மனை முன்பு சுவாமி விக்ரகங்களுக்கு தமிழக, கேரள போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யாஅறி, மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி விக்ரகங்கள் பவனி கேரளபுரம், அழகியமண்படம், வழியாக சென்று இரவில் குழித்துறை மகாதேவர் கோயிலை அடைந்தது. அங்கு இரவில் தங்கிய சுவாமி விக்ரக பவனி குழுவினர், நாளை காலை புறப்பட்டு தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை செல்கின்றனர். அங்கு கேரள அரசு சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இரவு நெய்யாற்றின்கரையில்

தங்கிவிட்டு 16ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை ஊர்வலம் அடைகிறது.

பின்னர் தேவாரக்கட்டு சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கோட்டைக்ககம் நவராதிரி கொலுமண்டபதிலும், வேளிமலை முருகன் ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை செந்திட்டை அம்மன் கோயிலிலும் 10 நாள் நவராத்திரிவிழா பூஜையில் வைக்கப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து 27ம் தேதி புறப்படும் சுவாமி விக்ரகங்கள் மறுபடியும பத்மநாபபுரம் அரண்மனையை அடைகின்றன. அங்கிருந்து சுவாமி விக்ரகங்கள் மறுபடியும் கோயில்களுக்கு பவனியாக கொண்டு செல்லப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்