தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.25-க்கு பிறகு தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்.25-க்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பசிபிக் கடலில் ‘லானினா’ நிகழ்வு தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தென் தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவகால நிகழ்வு தொடர்கிறது. மேலும் வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதிகள் உருவாகி, தென்னிந்திய கடற்பகுதிக்கு வடக்கே நகர்ந்து செல்லக்கூடிய நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகம், தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் மேற்கு திசைக் காற்று, அக்.22 வரை தொடர்ந்து வலுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.25-க்குப்பிறகே தொடங்குவதற்கான வாய்ப்பு தற்போது நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

12 மாவட்டங்களில் மழை

இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

மத்திய மேற்கு வங்கக் கடல்பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அக்.13-ம் தேதி (இன்று) அதிகாலைஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக் கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகியமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம் கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

க்ரைம்

23 mins ago

சுற்றுச்சூழல்

59 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்