கரோனா பாதிப்புக்கு பிறகு ரயில்வேயில் என்னென்ன மாற்றங்கள்?- தெற்கு ரயில்வே விளக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்புக்கு பிறகு ரயில்வேயில் பல்வேறு புதிய மாற்றங்கள் அமல்படுத்தி வருவது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பாதிப்புக்குப் பிறகு ரயில்வேயின் வழிமுறையைப் பின்பற்றி பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரயில்கள், ரயில் பெட்டிகளில் தினமும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகளை மட்டுமே உள்ளே அனுமதிப்பது, உடல் வெப்பநிலை பரிசோதித்தல், ரயில் டிக்கெட்டை தொடாமல் பரிசோதிப்பது, தெர்மல் ஸ்கிரினிங் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் வாரியத்தின் வழிமுறையின்படி, ஏசி பெட்டிகளில்ஏசி இயக்கப்படுகிறது. மேலும்,பயணிகளுக்கு போர்வை அளிப்பது, ரயில்வே உணவுகளை சமைத்து விநியோகம் செய்வதுநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவைக்கு மட்டுமேஉணவுகளை விநியோகம் செய்ய ஐஆர்சிடிசி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் சற்று வெதுவெதுப்பாகவே சாப்பிட வேண்டுமென்பதால், பயணிகளுக்கு ‘ரெடிடூ ஈட்’ வகை உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

விளையாட்டு

54 mins ago

க்ரைம்

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்