‘சாலை வரியை ரத்து செய்தால் ஆம்னி பேருந்து இயக்கப்படும்’

By செய்திப்பிரிவு

கரோனா பேரிடர் காலத்தில் 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்தால் ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்க தயார் என்று அனைத்துஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்துஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் 6 மாதங்களாக ஆம்னிபேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, கரோனா ஊரடங்கு காலத்தை கணக்கிட்டு 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்,

அரசிடம் வலியுறுத்தல்

ஆம்னி பேருந்துகளில் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும், ஏசி வசதியுள்ள பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வரு கிறோம். ஆனால், தமிழக அரசு எங்கள் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இருப்பினும், கரோனா பேரிடர் காலத்தில் 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்தால் ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

சினிமா

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்