ஊதியம் இல்லாமல் தவிக்கும் ஊர்க்காவல் படையினர்

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் ஊர்க்காவல் படையினருக்கு மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாததால், அவர்கள் தவித்துவருகின்றனர்.

மாவட்டத்தில் 426 பேர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்துவருகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி ஒதுக்கப்பட்டு, தினசரி ரூ.250 சம்பளம் வழங்கப்படுகிறது. உள்ளூர் போலீஸாருடன் இணைந்து, இரவு ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைப் பாதுகாப்பு, கோயில் திருவிழாவில் பாதுகாப்பு, தேர்தல் கால அவசரப் பணி உட்பட பல்வேறு பணிகளில் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

புதுச்சேரி, கேரளம், கர்நாடகம்,ஆந்திர மாநிலங்களில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதத்தில் 30 நாட்களும் பணி வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் குறைந்த ஊதியத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

தற்போது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த மே மாதம் முதல் தொடர்ச்சியாக மாதம் முழுவதும் ஊர்க்காவல்படையினர் பணிபுரிந்துவருகின்றனர். இதற்காக தினசரி சம்பளமாக ரூ.560 நிர்ணயம்செய்யப்பட்டது. ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, ‘மாதத்துக்கு 15 நாட்கள் தான் பணி என்றாலும், மற்ற நாட்களில் அழைத்தாலும் பணிக்குச் செல்ல வேண்டும். கோயில் திருவிழாக்கள், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கடி காவல் துறையில் இருந்து அழைக்கின்றனர். தினசரி ஊர்க்காவல் படை பணிக்கு வந்து விடுவதால் வேறு வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. பேரிடர் போன்ற கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் எங்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

ஊர்க்காவல் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சேவை நோக்கம் கொண்டவர்கள்தான் ஊர்க்காவல் படையில் பணிஅமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு ஊதியத் தொகை ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் போட்டு வழங்கப்படுகிறது.

இதனால், ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் ஊதியம் வழங்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

இந்தியா

12 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்