சென்னையில் பழுதடைந்துள்ள சிக்னல்களை சீரமைக்கும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் ரூ.18.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பழுதடைந்த சிக்னல்களை சீரமைக்கும் பணியை போக்குவரத்து போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முழு ஊரடங்கையொட்டி சென்னையில் உள்ள 408 சிக்னல்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. தற்போது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் சிக்னல்கள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் பல சிக்னல்கள் இயங்கவில்லை. இவ்வாறு பழுதடைந்து கிடக்கும் சிக்னல்களை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீஸார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 7,87,242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8,64,168 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 6,38,859 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இதுவரை 18 கோடியே 22 லட்சத்து 54,791 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம், நேற்று தடை உத்தரவை மீறியதாக 484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்