பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் நுழைவுத் தேர்வு: இந்துஸ்தான் பல்கலை. அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு (HITSEEE 2020) குறித்த அறிவிப்பை இந்துஸ்தான் தொழில்நுட்ப, அறிவியல் கல்வி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2020-21 கல்வியாண்டில் பி.டெக்., பி.ஆர்க், பி.டிஸ் (டிசைன்) உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 5 தொடங்கி 7-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. உலகின் எந்த பகுதியில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே ஆன்லைனில் நுழைவுத் தேர்வுநடப்பது இதுவே முதல்முறை.

இதில் பங்கேற்க விரும்புவோர்இணையதளத்தில் (www.hindustanuniv.ac.in) ஆன்லைனில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கிளீன் எனர்ஜி, சைபர் செக்யூரிட்டி, ஏவியானிக்ஸ், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் உட்படவளர்ந்துவரும் துறைகள் தொடர்பான பல படிப்புகளை இந்துஸ்தான் பல்கலைக்கழகம் வழங்குகிறது. கல்வி, பொருளாதாரம், விளையாட்டுத் திறன் அடிப்படையில் டாக்டர் கேசிஜி வர்கீஸ்கல்வி உதவித் தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பாடப் பிரிவுகள், நுழைவுத் தேர்வுபற்றிய கூடுதல் விவரங்களைபல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்