கரோனா தடுப்பு தன்னார்வலருக்கு பாலியல் தொல்லை தந்த மாநகராட்சி அதிகாரி இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

தன்னார்வ பெண் களப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவிப் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வீடு வீடாககாய்ச்சல் அறிகுறியுடன் இருப்போர், தொற்றா நோய்களுடன் இருக்கும் முதியோர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்காக 4 ஆயிரம் தன்னார்வகளப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு பணி வழங்கி கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த மாநகராட்சிவார்டு உதவி பொறியாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் தன்னார்வ பெண் களப்பணியாளர் ஒருவரின் கைபேசியை தொடர்புகொண்ட மாநகராட்சி உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன், பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். அதை ஒலிப்பதிவு செய்த அந்தப் பெண், மாநகராட்சி ஆணையரிடமும் எஸ்பிளனேடு மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சிஆணையர் கோ.பிரகாஷ்கூறும்போது, ‘‘பெண் பணியாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த புகார்காரணமாக, சில தொடக்கநிலை ஆதாரங்கள் அடிப்படையில், மாநகராட்சி உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பாக விசாரணையும் நடத்தப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்