சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: ஜெகத்ரட்சகன் எம்.பி.யிடம் அமலாக்கத் துறை விசாரணை

By செய்திப்பிரிவு

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அரக்கோணம் தொகுதி திமுகஎம்.பி. ஜெகத்ரட்சகன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் ரூ.65 கோடி அளவுக்கு சொத்து வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன்அனுப்பினர். இதையடுத்து, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்