புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்: 4 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி ராஜ்யசபா எம்பி தேர் தலில் அதிமுக வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் மனு ஏற்கப்பட்டது. மீதமிருந்த 4 சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.

புதுச்சேரி ராஜ்யசபா எம்பியாக உள்ள கண்ணன் பதவிக்காலம் முடிவதால், புதிய எம்பியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி, 28-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக் கல் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பத்மராஜன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், சைமன் சிட்டி பாபு, தர்மராஜன் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முன்தி னம் (18-ம் தேதி) காலை உருளை யன்பேட்டையை சேர்ந்த ஞானசேக ரன் என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். அன்று மதியம், ஆளும் என்ஆர் காங்கிரஸ் ஆதரவுடன் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் என்பவர் அதிமுக சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்றது. அதில், அதிமுக வேட்பாளர் கோகுலகிருஷ்ணன் வேட்புமனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்ற 4 சுயேச்சைகளின் வேட்பு மனுக்களும் உரிய விதிமுறைகளின் படி தாக்கல் செய்யவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து அதிமுக வேட்பாளர் கோகுலகிருஷ்ணன் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய் யப்படுவது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

10 mins ago

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

47 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்