மாலத்தீவில் தவித்த 87 பேர் கப்பல் மூலம் மீட்பு: தமிழக - கேரள எல்லை தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு

By எல்.மோகன்

கரோனா அச்சத்தில் மாலத்தீவில் தவித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 87 பேர் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர்.

இவர்கள் தமிழக, கேரள எல்லை பகுதிகளான களியக்காவிளை, கொல்லங்கோடு தங்கும் விடுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா பரவி வருவதை தொடர்ந்து மாலத்தீவில் தவித்த இந்தியர்களை மீட்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்க விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலத்தீவில் தவித்தவர்கள் இந்திய கடற்படை கப்பல் மூலம் மீட்டு கொச்சி துறைமுகம் அழைத்து வரப்பட்டனர். நேற்று நள்ளிரவில் இருந்து அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 87 பேர் தமிழக, கேரள எல்லை பகுதிகளான களியக்காவிளை, மற்றும் கொல்லங்கோட்டில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிவதற்கு சளி, மற்றும் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து பரிசோதனை கூடத்திற்கு அனுப்பினர்.

இதைப்போல் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வந்த 60 பேர் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு போலீஸார், மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாலத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்தோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள களியக்காவிளை தங்கும் விடுதி முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

52 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்