முழு ஊரடங்கு உத்தரவை தவறாக புரிந்துகொண்ட மக்கள்; பொருட்கள் வாங்க கடைகளில் லட்சக்கணக்கில் குவிந்தனர்- காய்கறிகள் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன

By செய்திப்பிரிவு

அரசின் முழு ஊரடங்கு உத்தரவை தவறாக புரிந்துகொண்ட மக்கள், கடைகள் முன் லட்சக்கணக்கில் குவிந்து, காய்கறி மற்றும் மளிகைபொருட்களை தேவைக்கு அதிகமாக அள்ளிச் சென்றனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இன்றுமுதல், 29-ம் தேதி வரை சென்னை மாநகராட்சி (புறநகர் உட்பட), கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

முழு ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது என்று தவறாகப் புரிந்துகொண்ட பொதுமக்கள், காய்கறி மற்றும் மளிகைக் கடை களில் நேற்று லட்சக்கணக்கில் குவிந்தனர்.

நகரின் பெரும்பாலான மளிகை மற்றும் காய்கறி கடைகளில் நேற்று காலை 6 மணிக்கே மக்கள்நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதன் காரணமாக பல காய்கறி கடைகளில் காலை 9 மணிக்கே அனைத்து பொருட்களும் விற்றுத் தீர்ந்தன. அனைத்து கடைகளிலும் முட்டை, ரொட்டி போன்றவை காலை 8 மணிக்கே விற்று தீர்ந்துவிட்டன. எண்ணெய், பருப்பு வகைகள், கோதுமை, கம்பு, கடலை போன்ற மாவு வகைகள் உள்ளிட்டவை காலை 10 மணிக்குகாலியாகிவிட்டன.

3 மணி வரை நீட்டிப்பு

பொதுமக்களில் பலர், தாங்கள்விரும்பிய நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய் வகைகள் கிடைக்காத நிலையில், கிடைத்த பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதற்கிடையே, பொதுமக்களின் வசதிக்காக மளிகை மற்றும் காய்கறி விற்பனை நேரத்தைநீட்டிக்க வேண்டும் என்று திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை 3 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். மாலை3 மணி வரை கடைகள் திறந்திருந்தாலும், தாங்கள் விரும்பிய பொருட்கள் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

11 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

35 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

மேலும்